பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் கடிதம் /115 "பேச விஷயங்களா இல்லை? உன் கொள்கையை நீ சொல்! அவர்கள் கொள்கையை அவர்கள் கூறட்டும்! பொய்யும்-புனைச் சுருட்டும்-பொல்லாங்கு மொழி களும் வேண்டாம் அப்பா!” என்று கதறியழுதாள், அம்மா! என்னைத் தடுக்காதே! அந்த வேசி மக்களை நான் விடமாட்டேன்!” என்று எரிமலை போலக் குமுறினான்! "ஏய்! தம்பி! யாரைப் போய் வேசி மக்கள் என்கிறாய்? நான் ஒரு உண்மையைச் சொல்கிறேன் கேள்! நீ யார் தெரியுமா? உன் அப்பா கப்பலுக்குப் போயிருக்கும்போது, அவர் போன இரண்டு வருடம் கழித்து என் வயிற்றில் உதித்தவன்! என்று அந்தத் தாய் கூறிக் கொண்டே மூர்ச்சை யுற்றுக் கீழே சாய்ந்தாள். 'அய்யோ! அம்மா!” என்று அலறினான் இந்த அரசியல் கோமாளி! உலகமே சுற்றியது போலிருந்தது! அவன் தலையில் ஆயிரம் சம் மட்டி அடிகள்! மௌனமாகிவிட்டான்! என் பழைய நண்பா! இந்தக் கதை உன் கண்களைத் திறக்கப் பயன்படுமானால் நான் மிக்க மகிழ்ச்சி அடைவேன். அன்புள்ள மறவன் 2.12 68