பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“ஜாக்குலின்கள்” அன்பு நண்பா! திருமணச் செய்தியோடு இந்த மடலைத் தொடங்கு கிறேன். கல்நெஞ்சன் ஒருவனின் கொலைத் துப்பாக்கிக்கு இரையான அமெரிக்க ஜனாதிபதி கென்னடி மனைவி ஜாக்கு லின், ஐந்தாண்டுகள் பொறுத்திருந்து இப்போது ஒனாசிஸ் கோடீஸ்வரனை மணந்து கொண்டிருக்கிறார். என்ற அம்மையாருக்கு வயது முப்பத்தி ஒன்பது. புதிய கணவனுக்கு வயது அறுபத்து எட்டுத்தான்! விவாக ரத்து செய்து கொண்ட ஒனாசிஸ், ஜாக்குலினை விதவைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். மணவிழாவின் போது ஜாக்குலினின் பத்து வயது மகளும், எட்டு வயது மகனும் கையில் மெழுகு வர்த்திகளுடன் நின்று கொண்டிருந்தார்கள். விதவைத் திருமணமென்றால் அறிவியக்கவாதிகள் பாராட்டத்தான் வேண்டும். வாழ்த்துச் செய்தி அனுப்பத்தான் வேண்டும். "பாடாத தேனீக்கள் பசியாத நல்வயிறு! பார்த்ததுண்டோ? எனக்கேட்டு, விதவைகளின் உணர்ச்சிகளுக்குத் தீ வைத்து சுட்டெரித்துவிடக்கூடாது என்று பாரதிதாசன் பாடியதை எத்தனையோ முறை படித்து படித்துப் பாராட் டியிருக்கிறோம். ஆனாலும் ஜாக்குலின் திருமணம் யாருக்கும் மகிழ்ச்சி தரவில்லை; அவருக்கும் அவர் புதிய கணவருக்கும் தவிர!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_1.pdf/13&oldid=1691828" இலிருந்து மீள்விக்கப்பட்டது