பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 'அரசியல் மோசடியாம்- அறிவிக்கிறார்; அபூர்வப் பிறவி!" அன்பு நண்ப, எதிர்க்கட்சித் தலைவர் கருத்திருமன் இருக்கிறாரே; நேரில் பேசும்போது பழம்நழுவிப் பாலில் விழுவதுபோலப் பேசுவார். இந்தப் பூனையும் இந்தப்பாலைக் குடிக்குமா என்று தோன்றும்; அவர் பல் காட்டிப் பேசும் போது! அதுவும் நமது அண்ணாவிடத்திலே அவர் அன்பு தவழப் பேசுவதைப் பார்த்தால்; ஆகா! எவ்வளவு தங்கமான குணம்! எத்துணை தயாள சிந்தை! அரசியல் மாச்சரியங் களை மறந்து நமது அண்ணனிடத்திலே எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் என்றுதான் பார்ப்பவர்கள் நினைப்பர், கள்ளங்கபடமற்ற நமது அண்ணா அவர்களும் அவரது கனிவான உரையாடலால் கவரப்பட்டு உள்ளந்திறந்து பேசுவார். உவகை பூத்திடுவார், கடுமொழி கூறும் கயவர்கள் எதிரே நின்று மேலும் மேலும் சுடுமொழி வாரி இறைத்திடினும் புன்னகை காட்டுகின்ற அமைதியின் வடிவமாம் அண்ணா அவர்கள்; கருத்திருமனாரின் உள்ளத்தைப் பற்றி ஒரு சிறிதும் எண்ணிப்பாராமல் பள்ளம் போய் வீழுகின்ற பாய்ச்சல் நீரது போல் பாசத் தை வழங்கிடுவார். கருத்திருமன் பேச்சோ; தேன்பாகெனும் பேச்சு; ஆனால் அதிலே தேளின் விஷம்! தென்றல் போல வார்த்தைகள்! ஆனால் தீயினும் கொடிய நினைவுகள்! நயமிகு