பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிகள்! கலைஞர் கடிதம் / 119 அய்யகோ; அத்தனையும் நச்சு எண்ணத்துடன்! “தொழுத கையுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் அழுத கண்ணீரும் அனைத்து” என்ற குறள், கருத்திருமனுக்காகவே எழுதப்பட்டது ற என்று கூடத் துணிந்து கூறலாம். அண்ணாவைப் பற்றி அவர் ஆயிரங்கூறட்டும்; பொறுத்துக் கொள்ளலாம். நம்முடைய அன்பின் திரு வுருவம் திரும்பி வருமா என்று திக்குத் தெரியாத காட்டில் நின்று தமிழகமேதேம்பியழுது வழியனுப்பியதே;அப்படிப் பட்ட அண்ணனுக்கு ஏற்பட்ட சிகிச்சை செலவை ‘சர்க் கார்' ஏற்க வேண்டியதில்லை-கட்சி ஏற்றுக் கொள்ளும் என்று விடுத்த அறிவிப்புக்குக் கருத்திருமன் பதில் கூற ஆரம்பித்து நரகல் நடையழகராய்-நடுங்கா கராய்-காட்சி தருவதைக் தருவதைக் காணும்போது; இவரும் ஒரு மனிதரா? என்றுதான் கேட்கத் தோன்று கிறது. நாக்கழ அய்யோ! அண்ணா சிகிச்சை செலவை சர்க்கார் ஏற்கிறது என்று கூறினால், எதிர்க்கட்சித் தலைவர் கருத்திருமன், அதைக் கண்டிப்பதிலே மனித உணர்வு இல்லாவிட்டாலும் “வாதம்” இருக்கிறது என்று ஒப்புக் கொள்ளலாம். முதலமைச்சர், சிகிச்சைச் செலவை சர்க்கார் ஏற்க முழுக்க முழுக்கக் கடமைப்பட்டிருந்த போதிலும்; அது தேவையில்லை என்று கட்சி, அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுவிட்டது - இதற்கு ஒரு ஆபாசமான அறிக்கை -இருதய மற்ற அறிக்கை-பேய்கள் கூட பேசுவதற்கு அஞ்சுகிற தோரணை யில் கருத்திருமன் விட்டிருக்கிறார் என்றால்; அவரை மனித குலத்திலே சேர்ப்பதற்கே வெட்கமாக இருக்கிறது!