பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 / கலைஞர் கடிதம் அண்ணன் உருவாக்கிய கழகம்! அவர் வளர்த்த கட்சி! அவரால் ஆளாக்கப்பட்டவர்கள் நாம்! அவருக்காக ரத்தம் சிந்த, வியர்வை கொட்ட, உயிரை அர்ப்பணிக்கத் தயாராயிருக்கிற தம்பிமார்கள் அணிவகுப்பு! 6 கருத்திருமனைப் போல; “அன்று சுப்பிரமணியத்துக்கு ஜே! இன்று காமராஜுக்கு ஜே!” போடுகிற கூட்டமல்ல! எங்கள் அண்ணன் சுகம்பெற- எங்கள் அண்ணன் நலமுடன் இருக்கிறார் என்ற செய்தி கேட்க- உடல், பொருள், ஆவி மூன்றையும் பரிசாகக் கேட் பினும் தரத் தயாராக இருக்கிற கழகத் தோழர்கள் மனம் புண்பட; 6 6 “அண்ணா சிகிச்சை நிதி அரசியல் மோசடி!" என்று அறிக்கை விட்டிருக்கிறாரே; கருத்திருமன் -அவரை நாடு கேட்கிறது- எது மோசடி? சிகிச்சைப் பணத்தை அரசாங்கம் ஏற்க வேண்டா மென்பதும் மோசடியா?