பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகுந்த பாடம் தரவேண்டாமா? அன்புள்ள நண்பா, சென்னையிலுள்ள அகில இந்திய வானொலி நிலையத் தின் பெயரை “ஆகாஷ்வாணி என்பதிலிருந்து 'வானொலி’ என்று மாற்ற வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக் கைக்கு மத்திய அரசு இணங்கியதையொட்டிப் பிறகோரிக் கைகள் முளைத்தன. இந்தி பேசுவோர், சில விஷயங் களிலாவது ஆங்கிலத்துக்குச் சமமான அந்தஸ்து இந்திக்கு அளிக்கப்பட வேண்டும் என்றனர். எனவேதான் இந்தி பேசுவோரின் கோரிக்கையான 'இந்திச் செய்தி ஒலி பரப்பும்' கோரிக்கையை எதிர்க்க முடியவில்லை.' -ஷாவின் பதிலைப் பார்த்தாயா நண்பா; இந்தி பேசு வோரின் கோரிக்கையை ஷா நிறைவேற்றட்டும், வேண் டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அது இந்தி பேசும் மாநிலத்தில் மட்டும் இருக்கட்டும். ய வானொலி'-என ஆகாஷ்வாணியின் பெயரை அகில இந்திய அளவிலா மாற்றினார்கள்? தமிழகத்துக்கான, தமிழ் ஒலிபரப்புக்களில்தானே வானொலி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது; ஷாவின் விளக்கம் சிறு குழந் தையும் நம்ப முடியாத ஒன்றல்லவா? அப்படியே ஷாவின் வாதத்தை ஏற்றாலும், இந்தி மொழி பேசுவோருக்கு இதுவரை செய்த சாதகங்களுக்கு பிரதிபலனாக, மற்ற மாநிலக்காரர்களுக்கு இந்தி பேசா தோருக்கு சாதகங்கள் செய்யப்பட்டுள்ளதா? அஞ்சல் அட்டையில் இந்தி வானொலியில் இந்தி