பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 / கலைஞர் கடிதம் அமெரிக்கா நாடு-விவாக aafika e ence ரத்துக்களை விதவை மணங்களை வியப்போடு பார்க்கிற நாடல்ல! ஆனாலும் அந்த நாட்டில் பெரும்பாலோர் இந்தத் திருமணத்தைப் பாராட்டிட முன் வரவில்லை. காரணம்; ஜான் கென்னடிக்கு ஜாக்குலின் இழைத்து விட்ட பெரிய கொடுமையாகவே அவர்கள் கருதுகிறார்கள். எத்தனையோ "யார் இதுபோல் திருமணங்கள், யார் யாருக்கோ நடைபெற்றிருக்கின்றன. அந்த யாருக்கோ" என்ற வார்த்தையிலேயே அதன் முக்கியத் துவம் அடிபட்டுப்போய் விடுகிறது. ஜான்கென்னடி-ஜாக்குலின் இல்லற வாழ்வு, எல்லா நாட்டு மக்களாலும் போற்றப்பட்ட ஒன்றாகும். கோடிக் கணக்கான வாலிபர்களையும் அணங்குகளையும் கென்னடி தம்பதியின் வாழ்க்கை, கவர்ந்திருக்கிறது. அவர்கள் இணைந்து நிற்கும் எழிலோவியங்களை, அவர்கள் இருவரும் சிரித்து மகிழும் இன்றைக்கும் வண்ணப்படங்களை பார்த்துப் பார்த்து மகிழ்வோர் ஏராளம்! அவர்களுக்கெல்லாம் இந்தச் செய்தி தலையில் விழுந்த இடிபோன்ற அதிர்ச்சியைத் தந்ததில் வியப்பில்லை. ஜாக்குலின், தனது இளங் கணவனை - எழில்மிகு காத லனை - திடீரெனக் கொடியவனின் - - துப்பாக்கி ரவை களுக்குத் தீனியாகக் கொடுத்த போது - பல பேர்; தங்கள் சொந்தச் சகோதரிக்கு ஏற்பட்ட பெரும் போல வேதனையில் ஆழ்ந்து துடித்தனர். இழப்பைப் மனித இயல்பு -உணர்வு அலைகள் - இவைகளை மைய மாக வைத்து, இப்போது நடைபெற்று விட்ட நிகழ்ச் சியைப் பார்த்தால் குற்றம் குறைசொல்ல முடியாதுதான். ஆனால்-அன்றில் பறவைகள் என்பார்களே; அது போல அனைத்துலக மக்களின் கண்ணெதிரே காட்சி தந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_1.pdf/14&oldid=1691829" இலிருந்து மீள்விக்கப்பட்டது