பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காங்கிரஸ் வெற்றியும் இந்தி திணிப்பும் ! அன்பு நண்பா! நாகர்கோவில் முடிவுக்குப் பிறகு உனக்கு எழுதிடும் முதல் மடல் இது. "வெற்றி பெற்றதற்காக வெறி கொண்டு திரியவும் கூடாது. தோற்றுவிட்டதற்காகத் துவண்டுவிடவும் கூடாது" என்ற முறையைக் கடைப் பிடித்து வளர்ந்துள்ள உனக்கு நான் ஒன்றும் மேலே எழுதிட விரும்பவில்லை. நமது பணி நாகர்கோவில் பகுதி யில் தீவிரப்படுத்தப்பட வேண்டும்-பரவலாக்கப்பட வேண்டும் என்பதே நாகர்கோவில் முடிவு நமக்குத் தந்துள்ள பாடமாகும். காங்கிரஸ் வெற்றி பெற்றால் ஏற்படும் தீமைகளை நாம் எச்சரித்தோம்! இந்தி ஆதிக்கம் தலை நிமிர்ந்து நடை போட காங்கிரசின் வெற்றி வழி வகுத்துவிடும். அதற்கு இடம் கொடாதீர்கள் எனத் திரும்பத் திரும்ப வேண்டு கோள் விடுத்தோம். காங்கிரசுக்குத் தரும் தோல்வி இந்தி ஆதிக்க வெறியர்களுக்குத் தரும் பாடம் என எடுத்துக் கூறினோம். ஆனால் நாகர்கோயில் மக்களோ காங்கிரசின் மீது தாங்கள் வைத்திருந்த பற்றுதலை மாற்றிக்கொள்ள இயலவில்லை. மீண்டும் காங்கிரசிடமே நாகர்கோயில் தொகுதியை ஒப்படைத்திருக்கிறார்கள். ஆனால் நண்பா, நாகர்கோவில் தேர்தல் முடிவு வரு வதற்கு முன்னும்-முடிவு வெளிவந்த பின்னும் மத்திய அரசிலிருந்து வந்த இரு செய்திகளை ஏடுகளில் படித்திருப் பாய் எனக் கருதுகிறேன். நாகர்கோவில் தேர்தலுக்கும்-