பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாழடைந்த மண்டபமும் வௌவால்களும்! அன்பு நண்பா; கள் இன்றைய செய்தித்தாளில் இரண்டு வித செய்திகள் வந்துள்ளது. காங்கிரஸ் கட்சி “நகைச்சுவை” நிறைந்த கூடாரமாகி விட்டது என்பது போல அந்தச் செய்திகள் பத்திரிகைகளில் காட்சியளிக்கின்றன. ஒரு செய்தியில் தலைவரின் அறைகூவல் - மற்றொரு செய்தியோ தலைவருக்கே அறைகூவல் விட்டு நிற்கிறது. அகில இந்திய ரீதியிலே காங்கிரஸ் எப்படி கலகலத்து கிடக்கிறது என் பதற்கு இரண்டு செய்திகளும் சிறந்த எடுத்துக் காட்டுகள். என்ன, செய்தியைக் கூறாமல் பீடிகையை பலமாகப் போடுகிறானே எனக் கருதுகிறாயா? நீயே படித்துப் பாரேன் அந்த வேடிக்கை மிகுந்த செய்திகளை! “கட்சிவிட்டு கட்சி மாறுபவர்களை காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பா கடுமையாகத் தாக்கிப் பேசினார். அவர்களைப் “பாவிகள்” என்று வர்ணித் தார்." படித்தாயா செய்தியை! நிஜலிங்கப்பா கட்சி விட்டு கட்சி மாறுபவர்களைப் பாவிகள் என வருணித்துள்ளார். அத்தோடு விட்டாரா-தொடர்ந்து பேசுகிறார் பார்! “நான் காங்கிரஸ் தலைவராக இருக்கும்வரை கட்சி மாறிகளுக்குக் காங்கிரசில் இடம் கொடுக்க மாட்டேன்!"