பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 / கலைஞர் கடிதம் ஆம்,நண்பா! அகில இந்தியாவுக்கும் காங்கிரசின் தலைவராக விளங்கும் நிஜலிங்கப்பாதான் இப்படி முஷ்டி களை உயர்த்தி அறைகூவல் விட்டு பீகாரில் பேசியிருக் கிறார். காங்கிரசின் அகில இந்தியத் தலைவரின் பேச்சுக்கு காங்கிரஸ் இயக்கம் எத்தகைய மதிப்புத் தருகிறது என உனக்குத் தெரியுமா? செய்தி வந்த அன்றே பத்திரிகைகளில் வந்துள்ள மற்றொரு செய்தியை படித்துப் பாரேன். இன்று அரியானாவில் மூன்று சுயேச்சை உறுப் பினர்கள் காங்கிரசில் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து அரியானா சட்டசபையில் சுக்குப் பூரண மெஜாரிடி ஏற்பட்டுள்ளது! காங்கிர அகில இந்தியத் தலைவர் பேச்சு வந்த தினமே இச் செய்தி வந்துள்ளது. நிஜலிங்கப்பா அரியானா காங்கிரஸ் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்? "காங்கிரசிலே கட்சி விட்டு கட்சி மாறி யாரும் சேர வில்லை. சுயேச்சைகள் தானே சேர்ந்தார்கள். அதனால் நடவடிக்கை இல்லை" என வாதிடலாம். அந்த சுயேட்சைகள் காங்கிரஸ் அபேட்சகர்களை முறியடித்து வெற்றிவாகை சூடியவர்கள்தானே என்ற வாதம் ஒருபுறமிருக்கட்டும். எதிர்க்கட்சிக் காரர்களையே காங்கிரஸ் இயக்கம் ஜீரணித்துள்ள செய்தி ஒன்றும் நிஜ லிங்கப்பாவின் வீராவேசப் பேச்சு வெளி வந்த அன்றே வெளிவந்துள்ளது. இதிலே வேடிக்கை என்ன தெரியுமா? இந்தச் செயல் நிஜலிங்கப்பாவின் சொந்த மாநிலத் திலேயே நடந்து இருக்கிறது. "எஸ். ஆர். பொம்மை, எப் எஸ். பாடீல் ஆகிய ரு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மைசூர் சட்ட இரு