பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேங்கை போடும் வெள்ளாடு வேடம்! அன்பு நண்பா; வேங்கை வெள்ளாடு போல வேஷம் போட்டு வந்ததை கதைகளில் படித்திருப்பாய்! ஆனால் அது போன்றகாட்டுக்கதைகள் கட்டுக்கதைகள் என்று நினைத்து கதையின் கருத்தைச் சுவைத்திருப்பாய்! அந்தக் காட்டுக் கதைகளை மெய்ப்பிக்கும் விதத்திலே நாட்டு நடப்புகள் பலவற்றையும் சந்தித்திருப்பாய். ஆனால் அவற்றிற் கெல்லாம் சிகரம் வைக்கும் விதத்திலே நடக்க இருக்கும் ஒரு நிகழ்ச்சியைத்தான் உனக்கு இன்று எழுதப் போகி றேன். காமராசர் வெற்றி பெற்ற தினத்தை ஜனநாயக் உரிமை பாதுகாப்புத் தினமாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினர் கொண்டாடப் போகின்றனராம். காட்டிலே மட்டுமல்ல நாட்டிலேயும் வேங்கை வெள்ளாடு வேடம் பூணுகிறது என்று அதனால்தான் கூறினேன். காங்கிரசார் அதுவும் நாகர்கோவிலில் ஜனநாயகத்தைப் படுகொலை புரிந்த காங்கிரசார் ஜனநாயக உரிமையை பாதுகாக்கப் போகிறார்களாம் நண்பா! கொள்கைத் தங்கங்களை கொலை செய்தல் கொள்ளையர்போல் வழிமறித்துத் தாக்குதல் எதிரிகளின் பிரச்சார