பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் கடிதம் | 141 வண்டிகளை உடைத்தெறிதல் ரூபாய் நோட்டுக்களை வீசி மக்கள் ஓட்டுக்களைப் பறித்தல் போன்ற ஜனநாயக உரிமைகளை(!) பாதுகாக்க காங்கிரசார் விழா எடுக்கிறார்கள் போலிருக்கிறது. நாகர் கோவில் தேர்தலை நேரில் பார்த்தவர்கள் ஜனநாயகம் அங்கு எப்படி காங்கிரசாரால் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது என்பதை உணர்வார்கள். ஜனநாயக உரிமை பாதுகாப்புத் தினம் எனக் கொண் டாடி,காங்கிரசார் நாகர்கோவிலில் செய்ததுதான் ஜனநா யக உரிமையைப் பாதுகாக்கும் செயல்கள் எனப் பெருந் தலைவர் காமராசரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சுப்பிரமணியமும் தொண்டர்களை கொடுக்கப் போகிறார்கள். தட்டிக் பழைய படம் ஒன்றிலே உள்ள நகைச்சுவைக் காட்சி ஒன்று நினைவுக்கு வருகிறது. கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டு சாலையிலே போய்க் கொண்டிருந்த ஒருவர் மீது கல்லை எறிவார். அவரோ கோபத்தைக் காட்டாது கலைவாணரைத் தட்டிக்கொடுத்துத் தன்மேல் கல் எறிந் ததற்காக காசும் கொடுத்து செல்வார். கல் விட்டெறிந் தால் காசு கிடைக்கும் போலிருக்கிறது என்ற தவறான எண்ணம் கொண்ட கலைவாணர் அடுத்து ஒரு முரடன் வரும்போது அவன்மீதும் கல்லை விட்டெறிவார். முரடன் என். எஸ். கே. இருக்கும் இடம் நோக்கி வருவான். காசு கொடுப்பான் என இவரும் கையை நீட்டுவார். என்ன கிடைத்திருக்கும் என்பதுதான் உனக்குத் தெரியுமே! கொலைகள் அந்தச் சினிமாக் கதையைப்போல செய்து - கலகம் விளைவித்து - கல்லெறிந்து - அராஜகம் நடத்தியவர்களை ஜனநாயக உரிமையைப் பாதுகாத்த