பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீவிளைத்த கழனி- நீ உழைத்த உழைப்பு ! ஆருயிர்த் தோழா ! அன்பின் ஊற்றே ! ! ஆற்றல் நிறை வீரா ! இன்றைக்குத் தேதி இருபத்தி நான்கு! நாளை மாலை ஐந்து மணியுடன் பிரச்சாரக் கூட்டங்கள் முடிவடை கின்றன. மேடையின் வாயிலாக மக்களுக்குத் தர வேண் டிய விளக்கமெல்லாம் தந்தாகிவிட்டது. தலைமைக் கழகச் சார்பில் மாநகராட்சியின் சாதனைகளை விளக்கி வெளியி டப்பட்ட சுவரொட்டிகளையெல்லாம் ஆங்காங்கு ஒட்டி விளம்பரப் படுத்திவிட்டாய். நீ கட்டியுள்ள இருவண்ணக் கொடித் தோரணங்கள் - பதாகைகள்-எழுச்சிமிகு வளைவு கள்...அனைத்தும் உன் கை வண்ணம் காட்டி நிற்கின்றன. நமது அண்ணனை எத்தனை எத்தனையோ கோணங்களில் எடுக்கப்பட்ட படங்களையும் அவர் தம் பொன் மொழி களையும் இணைத்து நீ அமைத்துள்ள காட்சிகள் கண்ணையும் கருத்தையும் கவருகின்றன நோக்குமிட மெல்லாம் உதய சூரியன் சின்னம். அதன் ஒளியுமிழ்க் கோலம். எவ்வளவு உயரத்தில் கொடிகளைப் பறக்க விட்டிருக்கிறாய்; தோர ணங்களை நீ கட்டியிருக்கும் அழகைப் பார்க்க அண்ணாந்து பார்த்தால்; ஆகா! இன்னும் கொஞ்சம் முயற்சித்தால் மேகக் கூட்டங்களுக்கிடையே கூட நீ வண்ணத் தோர ணங்களை அமைத்திடுவாய் என்ற நம்பிக்கை தோன்று கிறது. தோரணங் கட்டுவதற்காகச் சுவரொன்றில் ஏறிய தோழன் ஒருவன் கால் தவறி கீழே விழுந்து மாண்டான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_1.pdf/17&oldid=1691832" இலிருந்து மீள்விக்கப்பட்டது