பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 கலைஞர் கடிதம் திருப்பூரில்! இன்னொரு செயல்வீரன், சென்னையில் மின் சாரக் கம்பத்தின் உச்சியில் சிக்கி கருகிப் போனான். அப்படியெல்லாம், கொடி கட்ட, தோரணம் தொங்க விட, மேடையமைக்க, பாடுபட்ட கரங்களப்பா உன் கரங்கள்! என் கரங்களும் கூட அப்படித்தான். கூட்டம் நடத்திப் பழக்கப்பட்டவன் கொடி தூக்கிக் கோஷம் - போட்டுப் பழக்கப்பட்டவன். அந்த உரிமையோடுதான் உன்னை அழைக்கிறேன்; இத்தனை நாள் செய்த வேலை பெரி தல்ல...இன்னும் இரண்டு மூன்று நாட்கள் செய்திட. வேண்டிய பணியே மிக முக்கியம்! முயலும் ஆமையும் கதை-தொடக்கப் பள்ளியிலேயே கற்றுக்கொண்டது! தூங்கிவிட்ட முயலாகி விடாதே- துள்ளிக்குதித்து தூயபணியாற்று! வாக்காளர் பட்டியல் சரி பார்த்து விட்டாயா? தெருத்தெருவாகப் பிரித்து எழுதிவிட்டாயா? இன் னென்ன தெருவுக்கு இன்னன்னார் என்று குழுக்கள் அமைத்து அவர்பால் பொறுப்பை வழங்கிவிட்டாயா? வீட்டுக்கு வீடு 'சிலிப்' கொடுத்து விட்டாயா? விலாசம் மாறிய வாக்காளர்களின் கணக்கு தயாரா? இறந்துபோன வாக்காளர்கள், எழுந்து வராமல் பார்த்துக் கொள்ள கண்காணிப்பு செய்து விட்டாயா? ய தேர்தல் வேடிக்கை பார்க்காதது மட்டுமல்ல; அந்த வேடிக்கை பார்க்க வருபவர்களையும் தயவு தாட்சண்ய மன்னியில் கடிந்து கொண்டு அவர்களைப் பணியாற்ற தக்க இடம் பார்த்து அனுப்பிட; ஏற்பாடுகள் செய்து விட்டாயா? தேர்தல் நாளன்று பரபரப்பு அடைவதில்லை...பீதி அடைவதில்லை-அமைதியான முறையில் ஆக்கப் பணிகளை ஆற்றுவேன் என்றுரைத்து அதற்கான திட்டங்களை தீட்டி விட்டாயா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_1.pdf/18&oldid=1691833" இலிருந்து மீள்விக்கப்பட்டது