பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிதானமாகப் பேசுங்கள்! அன்புள்ள சுப்பிரமணியனாருக்கு; . “தமிழக ஆட்சியாளர்களிடம் இன்று நிறைய பணம் இருக்கிறது. பல்வேறு துறையில் சம்பாதித்த பணம், பல வசூலின் பணம், இவைகளும் இருக் கிறது. அதை வைத்து வெற்றிபெற முடியுமா என்று திட்டமிடுகிறார்களாம்.” மாநகராட்சித் தேர்தல் கூட்டத்தில்" தாங்கள் பேசிய தாக இன்று காலை காங்கிரஸ் ஏடொன்றில் வந்த மேற் கண்ட செய்தியைப் பார்த்தேன். இலா ஆட்சியாளர்களிடம் இருக்கும் பணத்தை அரசாங்க லாகாவில் இருந்து எடுத்துத் தேர்தல் செலவுகளைக் கட்சிக்காகச் செய்யலாம் என்ற தங்கள் புதிய வாதம்; பொறுப்புள்ளவர்களின் வாதம் தானா? தங்கள் வாதம் சரியானது என்றால் சுப்பிரமணியம் அவர்களே! இருபதாண்டு காலம் காங்கிரஸ் கட்சி தேர் தலுக்காகச் செலவழித்த பணமெல்லாம், மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட பணம் தானோ என்று கேட்கத் தோன்றுமல்லவா? அரசாங்கம் - அதற்குப் பல இலாக்காக்கள், நிதி இலாக்கா என்று ஒரு தனி இலாக்கா அதற்கும் பொறுப்பான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_1.pdf/22&oldid=1691837" இலிருந்து மீள்விக்கப்பட்டது