பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16/ கலைஞர் கடிதம் இப்போது மகிழ்ச்சிதானே!' என்று கேட்பது காதில் விழுகிறதா? எப்படியப்பா காது கேட்கும்? அதன் கர்ணபேரிகை கிழிந்து தான் பல நாளாகிறதே! 'அத்தான்! என்ன இருந்தாலும் அண்ணாவுக்கு நீங்கள் இப்படி துரோகம் செய்திருக்கக்கூடாது. வெளியே தலை காட்ட முடியவில்லை. பக்கத்து வீட்டுக்காரர்கள் உன் கணவனுக்கு ஏன் இப்படி ஒரு கழுத்தறுக்கிற புத்தி வந்தது என்று கேட்கிறார்கள்’ என்று மனைவி அழுவது தெரிகிறதா? மாஜி நண்பனே! மதோன்மத்தனே! தலையை தொங்கப்போட்டுக்கொள்! அப்பா!கடைசியில் என்னை துரோகியின் மகன் என்று என் நண்பர்கள் எல்லாம் அழைக்கிற நிலையை உண்டாக்கி விட்டாயே! இதற்குத்தானா இந்த வீட்டில் பிறந்தேன்?" என்று நீ பெற்றெடுத்த பிள்ளை தொடுக்கிற கணைக்கு என்ன பதில் தரப் போகிறாய்? தன்னால் கழகத்திற்கு என்ன லாபம் எண்ணுபவனே தா உண்மையான என்று தலைவன்- என்ன - லாபம் ண்டன் ! கழகத்தால் தனக்கு என்று கணக்கிடுபவன் தலைவனுமல்ல ; தொண்டனுமல்ல !” இந்த உண்மையை கொடுக்கவில்லை. உணர உன் பதவி வெறி இடம் எப்படியோ சில இடங்களில் கழகத்திற்குத் தொல்லை கொடுத்து விட்டோம் என்ற திருப்தியைத் தவிர வேறு என்னப்பா விளைவைக் கண்டு விட்டாய்! இன்றோடு முடிந்து விட்டது உன் துரோகக் கதையின் ஆரம்ப அத்தியாயம்! அடுத்து; நாளை நீ எங்கேயிருக்கப் போகிறாய்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_1.pdf/28&oldid=1691843" இலிருந்து மீள்விக்கப்பட்டது