பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேர்மையும் பொறுப்பும் நீர்மேல் எழுத்தல்ல! அன்பு நிறைந்த அண்ணனே ! தாங்கள் இங்கு இல்லாத சமயத்தில் - தங்களின் தங்கம் நிகர் யோசனைகளை நேரடியாகப் பெற்றுப் பணி யாற்ற முடியாத நேரத்தில்-தங்கள் திருவுருவத்தைத் தியானித்தவாறு-விசாலமான தங்கள் ஒளி விழிகளின் எழிலை நெஞ்சில் பதித்தவாறு-தம்பிகளாம் நாங்கள் பெற்ற வெற்றியினை. இதோ தங்கள் தாள்களின் முன் வைக்கிறோம். 6 "மில்லர் தந்த மருந்தைவிட-பார்த்தசாரதியார் பரிவு டன் தந்த விருந்தைவிட-இனிக்குதடா தம்பீ; நீ தந்த வெற்றிச் செய்து" என்று இதழின் கடைகோடிச் சிரிப்பால் தாங்கள் தெரிவிப்பதை பத்தாயிரம் மைல் தொலைவிலே யிருந்து எங்களால் காண முடிகிறது அண்ணா! அப்பப்பா ; காங்கிரஸ் தலைவர்கள் என்ன பேச்சுப் பேசினார்கள் - என்ன ஆட்டம் ஆடினார்கள்-என்ன எழுத்து எழுதினார்கள். . “தி.மு.க. ஆட்சிக்குப் பாடம் கற்பிக்க மாநகராட்சி யில் காங்கிரசை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று முழங்கினார் காமராசர். "பாதயாத்திரைக்காரரே! அதுவும் பாதியாத்திரைக் காரரே! பாடம் பெறவேண்டியது நீங்கள் தான்” என்று புத்தி புகட்டிவிட்டார்கள். "மாநில அரசின் தவறுகளைக் கண்டிக்க மாநகராட் சியில் தி.மு.க.வை தோற்கடியுங்கள்” என்றார் பெருந் தலைவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_1.pdf/30&oldid=1691845" இலிருந்து மீள்விக்கப்பட்டது