பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"மாநகராட்சித் தேர்தலில் கலைஞர் கடிதம் / 19 மாநில அரசின் தவறு களைக் கண்டிக்கலாம் என்றால்; அதற்காகத் தண்டிக்கலாம் என்றால்; நாங்கள் ஒரேயடியாக மத்ய அரசின் தவறு களையே கண்டித்துத் தண்டித்து விடுகிறோம்" என்று மக்கள் நல்ல தீர்ப்பு வழங்கி விட்டனர். "தேர்ந்தெடுக்கப்படும் காங்கிரஸ் அங்கத்தினர்கள் தவறு செய்தால் அந்தப் பொறுப்பை தமிழ் நாடு காங் கிரஸ் ஏற்றுக்கொள்ளும். ஆகையால் காங்கிரசுக்கு வெற்றி அளியுங்கள் Te என்று கேட்போர் செவியிலே தேன் பாய்ச்சும் விதத்தில் சுப்பிரமணியனார் உறுதி மொழிகளை உதிர்தார். 6 "தலைமையை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டி யிடும் காங்கிரஸ்காரர்களைத் தண்டிக்க முடியவில்லை, நீங்களா ; நாளைக்கு செய்யப் போகும் காரியத்தைப்பற்றி கதை அளக்கிறீர்கள்" என்று ஆப்பு அடித்தது போலப் பதில் கூறி விட்டார்கள் வாக்காளப் பெருமக்கள். காங்கிரஸ் வெற்றி பெற்றால் கார்ப்பரேஷன் வருமானத்தில் பைசாவுக்கு பைசா பயன் மக்களுக்கே போய்ச்சேரும் என்றார் கொங்கு நாட்டுத் தங்கம் ! "இது பைசாவுக்குப் பிரயோசனமில்லாத பேச்சு! இந்தப் "பைசா" தத்துவத்தை இருபதாண்டு ஆட்சியில் ஏன் அமல் படுத்தவில்லை” என்று கேள்வியை எழுப்பினர். கேலி புரிந்தனர். கெக்கலி புக் கொட்டினர். இறுதியில் வாக்குச் சாவடியில் தீர்ப்பை யும் எழுதினர் சென்னை மக்கள். "கால் குடம் தண்ணீர் இல்லை. காவிரித் திட்டம் ஒரு கேடா?'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_1.pdf/31&oldid=1691846" இலிருந்து மீள்விக்கப்பட்டது