பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி பெற்றவனே உன் வேலை என்ன? அன்பு நண்பா, . வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் திளைத் திருக்கும் உன்னை வாழ்த்துகிறேன். உன் வெற்றிக்குக் காரணமானவர்களை யெல்லாம் கரங் கூப்பித் தொழுகிறேன். உன்னை மாநக ராட்சி மன்ற நாற்காலியில் உட்கார வைப்பதற்காகப் பாடுபட்ட உத்தமத் தொண்டர்களின் தொண்டர்களின் உழைப்புக்கு நன்றி செலுத்துகிறேன். அவர்கள் இரவு பகல் அலைந்து திரிந்து கண் துஞ்சாது கருமமே உயிராய்க் கொண்டு உன் கழுத்தில் வெற்றி மாலையை சூட்டியிருக்கிறார்கள். அந்த வாகைமாலை தொடுப்பதற்கு அவர்கள் மலர் பறித்த போது குத்திய முட்கள் எத்தனை? மாலை தொடுக்கும் நாராகத் தங்கள் நரம்புகளை அவர்கள் ஈந்திருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதே நண்பா! பதவியின் மூலம் பணி புரியும் வாய்ப்பு ஒன்றைக் கழகம் உனக்கு அளித்திருக்கிறதேயல்லாமல் அந்தஸ்து எனும் அலங்கார மகுடத்தை உன் தலையில் தூக்கி வைத்திருப்பதாகத் தயவுசெய்து எண்ணிக் கொள்ளாதே! நீ, ஏழை எளியவர்களுக்காகப் பாடுபடத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறாய். வசதியற்ற மக்களோடு அவர்களது தொல்லையைப் பகிர்ந்து கொண்டு தொண்டாற்றுவதற் காக உன்னை வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். எனக்குப் பதவி வந்துவிட்டது பார்த்தாயா? அதற்கு அடையாளம் பட்டுச் சொக்காயும் பளபளப்பான வேட்டியும் கண்டாயா?" என்று மினுக்கித் திரிவதற்கு அல்ல; மேனியைச் சந்தனம் போல் கழகத் தொண்டர்கள் தேய்த்து உனக்குப் பதவி தந்திருப்பது !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_1.pdf/35&oldid=1691850" இலிருந்து மீள்விக்கப்பட்டது