பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 / கலைஞர் கடிதம் அதைப் புரிந்து கொள்! அண்ணன் உள்ளத்தைத் தெரிந்து கொள்! அவர் எவ்வளவு? எளிமையானவர். எவ்வளவு தொண்டுள் ளம் படைத்தவர். அவருக்குத் தம்பி என்று சொல்லிக் கொள்ள அந்த எளிமை இயல்பு; தானாக வரவேண்டாமா உனக்கு! வராது என்ற முடிவில் அல்ல; வரவேண்டும் என்ற ஆசையில் கூறுகிறேன். உனக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்புக்குப் பதவி என்று பெயர். அது, மக்கட் பணியாற்ற உன் கையில் தரப்பட்டுள்ள கருவி. தோழமைக் கட்சியின் துணையோடு அமையப் . போகும் மாநகராட்சி தி. மு. க. நிர்வாகத்தில் நீ பலமான போட்டி போட வேண்டும். எதற்கு; நண்பா! எதற்கு? மேயர் பதவிக்கா? கமிட்டித் தலைமைக்கா? வேறு பொறுப்புக்கா? அல்ல ! அல்ல ! அதுவல்ல நான் எழுத வந்தது. யாரோ படு பொதுப்பணியாற்றுவதில் போட்டிபோட வேண்டும். பணியாற்றட்டும்-எவரோ விதைக்கட்டும்- எவரோ உழைக்கட்டும்-எவரோ வியர்வை சிந்தட்டும்- நமக்குப் பதவியும் அந்தஸ்தும் அடுக்கடுக்காய் அறுவடை யானால் போதும் என்ற போட்டிக்கு முந்தாதே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_1.pdf/36&oldid=1691851" இலிருந்து மீள்விக்கப்பட்டது