பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32/ கலைஞர் கடிதம் பணி புரிய ஒரு வாய்ப்பு! அந்த வாய்ப்பைப் பதவியில் இல்லாமலேயே கூடப் பயன்படுத்திக் கொள்ளலாம் அன்றோ? நீ தோற்றுவிட்டாலும்; உனக்காக வாக்களித்த வர்கள் உன் வட்டாரத்தில் ஆயிரக்கணக்கில் இருக் கிறார்கள். அவர்களுக்காகவும்-பொதுவாக உன் டத்தின் மேன்மைக்காகவும் பணியாற்றுவதே உன் கடமை உணர்ச்சிக்குத் தக்க சான்று! வட் சென்ற முறை தோற்றுவிட்ட தோழர்களைப் பார்த் தாயா: வெற்றி பெற்ற காங்கிரஸ்காரர்கள் கவுன்சில ராக இருந்து பணியாற்றியதைவிடப் பன்மடங்கு பணி ளை அந்த வட்டாரத்தில் நிறைவேற்றியிருக்கிறார்கள். க அதனால் இந்த முறை அதிகாரபூர்வமான கவுன்சில ராகி விட்டார்கள். நீ சுழன்று சுழன்று சுறு சுறுப்பாகப் பணியாற்றிக் கொண்டே இரு! பதவிகள் உன்னைத் தேடிவந்து காலடியில் விழும். நீ பதவிக்காகக் கழகத்தில் சேர்ந்தவனல்லவே! உறுதி சிறை செல்ல, சித்ரவதைகள் அனுபவிக்க, அடக்குமுறையை ஏற்க, அராஜகத்தைத் தாங்கிட, கொண்ட உள்ளத்தோடு கொடி தூக்கி உழைக்கத்தானே புறப்பட்டாய். நீ பட்ட பாடுகள் கொஞ்சமா? நீ ஏற்ற கொடுமைகள் குறைவானதா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_1.pdf/44&oldid=1691859" இலிருந்து மீள்விக்கப்பட்டது