பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காங்கிரசார் கலைஞர் கடிதம் / 33 ஆண்டபோது தேர்தல்கள் நடைபெற்ற முறையை நாடு அறியாதா? குடிசை பகுதியில்- இரவோடு இரவாகப் போலீசார் நுழைவர்- ஒன்று இரண்டு பத்து நூறு என்று பகுதிக்குப் பகுதி ஏழை எளியவர்களை வேட்டையாடி கழகத்திற்கு உழைக்கும் உன்னையும் உன் தோழர்களையும் வேனிலே ஏற்றிச் செல்வார்கள். சென்னையில் மட்டும் ஒரு தேர்தலுக்கு ஐயாயிரத்துக் குக் குறையாதவர்கள் சிறைப் பிடிக்கப்படுவார்களே! அப்போதுதானே நண்பா; நீ திடமனதுடன் நின்று வெற்றிச் செய்திகளைத் திரட்டிக் கொடுத்தாய்! இப்போதுதான் என்ன வந்து விட்டது. எதிர்பார்த்த சில இடங்கள் கிடைக்கவில்லை, அந்த இடங்களில் உன் இடமும் ஒன்று. கிடைத்த இடங்களில் நீதான் வெற்றி பெற்றிருக்கிறாய் என்பதை மறந்து விடாதே. . உன் வெற்றிக்குக் குந்தகம் புரிந்தவர்கள் என்னதான் ஆயிரம் காரணங்களை அடுக்கிக் காட்டினாலும்-உன் மீது கோடி கோடிப் பழிகளைச் சுமத்தினாலும்-அவர்கள் கழ கத்திற்குச் செய்த நேரிடையான-அல்லது மறைமுக மான பாதகத்திற்குப் பதில் சொல்லித்தான் தீரவேண்டும். நமக்கல்ல; அவர்கள் மனச்சாட்சிக்கு! கழகக் கண்மணியே! களையெடுக்கப்பட்ட கழனியில் கம்பீரமாக நிற்கும் உழவனைப்போல் நீ நிற்கிறாய். சூ-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_1.pdf/45&oldid=1691860" இலிருந்து மீள்விக்கப்பட்டது