பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 / கலைஞர் கடிதம் அந்தக் காலிகளுக்குத் துணையாகப் போலீசாரே போய் வீட்டில் உச்சியில் இருந்த கொடியை அகற்ற வில்லையா? இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் புகைப்படங்களாக போதே வந்ததை நாடு மறந்து விடுமா நண்பா! அப் கருணாநிதியைக் கொல்ல கோட்டூரில் முயற்சிக்க வில்லையா? பொதுத் தேர்தலின்போது கடலூர் கழகத் தேர்தல் அலுவலகத்திற்குச் சென்ற கருணாநிதியைக் காங்கிரசார் கத்தி கம்புகளுடன் தாக்குவதற்காகத்துரத்தி துரத்தி அலைந்து, இறு தியில் இளம்வழுதி அவர்கள் வீட்டை முற்றுகையிட்டு விட வில்லையா? சிதம்பரத்தில் மதி யழகனைத் தாக்கியவர்கள் யார்? உடுமலைப் பேட்டைக் கருகே திருமூர்த்தி ஆலைக்கு எதிரே அறிஞர் அண்ணாவின் காரை மடக்கிக் கொலை முயற்சியில் ஈடுபடத் துணிந்தவர் யார்? நெல்லிக் குப்பம் மஜீதை, கோவை ஆரோக்ய சாமியை, ஆலந்தூர் சின்னானை, மயிலாடி மாரியப்பனை, ஆலங்குடி சிதம்பரத்தை, தூத்துக்குடி சாமியை, வடசென்னை பாண்டியனை, இன்னோரன்ன பல கழகக் படுகொலைக்கு ஆளாக்கியது யார்? கண்மணிகளைப் அவர்கள் இன்னும் தங்கள் அராஜக வெறியைத் தணித்துக் கொள்ளாமல் செயல்படுகிறார்கள். பேசுகிறார் கள். எழுதுகிறார்கள். மதுரையிலிருந்து வெளிவரும் ஒரு காங்கிரஸ் ஏட்டில் தலைப்புச் செய்தியாக-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_1.pdf/52&oldid=1691867" இலிருந்து மீள்விக்கப்பட்டது