பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"மானங்கெட்ட மகாதேவன்” கலைஞர் கடிதம் / 41 என்று போலீஸ் ஐ. ஜி. யைப் பற்றிக் கொட்டை எழுத்தில் பிரசுரித்திருக்கிறார்கள். எழுதுகிற - பேசுகிற நண்பர்களுக்கு அந்த வீரமாவது கடைசி வரையில் நிலைக்கிறதா? வெட்கக் கேடு- அதுவுமில்லை! நீதிமன்றத்துக்கு வந்த தும் - "நான் அப்படிப் பேசவில்லை. அந்தக் கருத்தில் எழுதவே இல்லை” என்று அவர்களது பத்திரிகையில் வந்த தையே மறுத்து மழுப்புவதைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. இப்படி, அராஜகங்களுக்கான விதையை எழுத்திலும் பேச்சிலும் விதைத்து... அவர்கள் தொண்டர்களை அரா ஜகத்திலும் ஈடுபட முடுக்கிவிட்டு; “ஆகா! தி. மு. க. ஆட்சியில் அராஜகம்!” என்று நடிப்பதுதான் அவர்களின் தனித்திறமை! எதிர்பாராமல் கிடைத்த சில இடங்களுக்கே இந்தப் பாடுபடுத்துகிறார்களே; முழுவெற்றி பெற்றிருந்தால் என்ன பாடுபடுத்துவார்கள் என்பதை, என்னுடைய நண்பனே எண்ணிப்பார்! ஆகவே இந்த நிலையை உனக்கு வழங்கப்பட்ட ஒரு எச்சரிக்கையாகவே எடுத்துக் கொண்டு செயலாற்று! அன்புள்ள மறவன் 1.11.68

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_1.pdf/53&oldid=1691868" இலிருந்து மீள்விக்கப்பட்டது