பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 / கலைஞர் கடிதம் தோம்- இன்றைக்கோ! இனிச்சாவில்லை தமிழர்க்கென்று உறுதியின் சிகரம் நின்றோம். அகன்ற நெற்றி காட்டும் ஆயிரம் சிந்தனையும்- அகல விழிகள் காட்டும் அறிவு விளக்கின் சுடரும்- அமைதி தனைக் காட்டுவதற்கு இதழோரம் தெரிகின்ற புன்னகை யும் புத்தனையே நினைவுறுத்தும் - பாயவரும் வேங்கைதனைப் பரிவுடனே தடவிக்கொடுப் பாய் - முட்டவரும் விலங்கினமும் நீ தொட்டவுடன் சீற் றம் தணியும! நிலவே! மலரே! குளிரே! தமிழே! நின் புகழ் பாடுதற்குக் கவிஞரெல்லாம் கூடுகின்றார். தலைமை அமைச்சராய்த் தமிழ்நாட்டில் இருப்பதாலே இத்தகுதி பெற்றாய் என்று நெடுநாள் பகைவன் நினைக்கமாட்டான். நீ எழுத்தின் வேந்தன்- இலக்கியத்தின் மணிமுடி- அரசியலில் வழிகாட்டி- தலைவர்க்குத் தலைவன்... கூட நீ,தலையெடுத்துச் செம்மாந்து நடை போட்ட பின் னர்தான் தமிழுக்கோர் ஏற்றம் பிறந்த தென்பர் பெருமை சால் சான்றோர். பண்பாடுடைய அரசியல் உன் படைப்பு. அன்போடு தம்பியரை அரவணைத்துக் கழகம் நடத்துகிற மாண்பே மாண்பு. மண்ணெல்லாம் மன்னன் நீ! செந்தமிழ் மனங்கமழ வைத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_1.pdf/60&oldid=1691875" இலிருந்து மீள்விக்கப்பட்டது