பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் கடிதம் | 51 அளித்தபோது, அப்படி திருட்டுப்போன பொருள்களில் விஸ்கி பாட்டில்களும் இரண்டு என்று குறிப்பிட்டிருக்கி றார்' என்பதாக சுசிலா நய்யார் அவர்கள் கோவா மாநாட்டில் குற்றம் சாட்டி ஆவேச உரையாற்றியதை நீ ஏடுகளில் கண்டிருக்கக் கூடும். இந்த நிலையில் காங்கிரஸ் அமைச்சர்களே இருந்திடும் போது, மதுவிலக்கிற்கு மக்க ளிடம் ஆதரவு திரட்டுவது என்பது எவ்வாறு? எப்படியோ ஒரு வழியாக காந்தியச் கொள்கைகளில் அவர்கள் மிச்சம் வைத்திருப்பதாகச் சொல்லி வந்த மது விலக்குக் கொள்கையையும் கோவாவில் குழி தோண்டிப் புதைத்து விட்டார்கள். மகாத்மாவே ஊர் ஊராகக் சென்று பிரச்சாரம் புரிந்து, மாநிலங்கள் பலவற்றில் சட்டமாக்கப்பட்ட மது விலக்குத் திட்டத்தைச் சிறிது சிறிதாகத் தளர்த்தி ஒரு பக்கம் குடிப்பதற்குத் தாராள அனுமதியும், மறுபக்கம் “குடித்தால் தீது என்னும் பிரச்சாரமும் செய்யப் போகிறார்களாம். 99 மதுவிலக்குச் சட்டத்தை எல்லா மாநிலங்களிலும் அமலாக்கிவிட்டு, அந்தச் சட்டத்தையும் மீறி அங்கொன் றும் இங்கொன்றுமாகச் செய்யப்படும் குற்றங்களைத் தடுக்க மக்களிடையே பிரச்சாரம் செய்வதென்றால் பொருத்தமாக இருக்கும். திருடுவது கொடியது-கொலை வெறி பயங்கரமானது என்றெல்லாம் அறிவுரை வழங்கப் படுவது; திருடுவதும் கொலை புரிவதும் சட்டங்களின் மூலம் தடைப்படுத்தப் பட்டு; அதை மீறுகிறவர் மீது நடவடிக்கை எடுக்கப்படு கிற நாட்டிலே தான் நடைபெறுகிறது. மக்கள் திருந்தும் வரையில் ஏழு வருடம் காலக் கெடு கொடுப்போம் என்று திருட்டு, கொலை போன்ற குற்றங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_1.pdf/63&oldid=1691878" இலிருந்து மீள்விக்கப்பட்டது