பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் கடிதம் / 53 டத்தை வாபஸ் பெற முடியாது" என்று அழுத்தமாக விடையளித்தார். இந்த ஏழாண்டு காலக் கெடு பற்றி அவர் என்ன விளக்கம் தரப்போகிறாரோ! தெரியவில்லை. பொதுவாக வேதனையோடு கூற வேண்டுமானால் கோட்சேயினால் கொல்லப்பட்ட உத்தமர் காந்தியாருக்கு, கோவாவில் காங்கிரசார் சமாதிகட்டி முடித்து விட் டார்கள்! இனி; “பூப்போட்ட கிளாசிலே போடய்யா ஒண்ணரை’ 99 என்பது இந்தியாவின் பொது கீதமாக இருக்கும்! காங்கிரஸ் மாநிலங்களில், தேசீய கீதத்திற்கு அடுத்த படியாக இந்தக் கருத்துள்ள பாடல் ஒலிபரப்பப் பட் டால் வியப்படைய ஒன்றுமில்லை! அன்புள்ள மறவன் 7.11.68

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_1.pdf/65&oldid=1691880" இலிருந்து மீள்விக்கப்பட்டது