பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேயர் தேர்தல் நேரம் - நிலை - நேர்த்தியான முடிவு! அன்பு நண்பா! நீ,சும்மா இருந்தாலும் சில ஏடுகள் உன்னைச் சும்மா இருக்க விடுவதில்லை. உன் பெயரைச் சொல்லி நாலு நாட்களுக்குத் தனக்குத் தேவையான செய்தித் தீனியைத் தயாரித்துக் கொள்கின்றன. "யார் மேயராக வந்தால் என்ன? என் கட்சித் தோழன் மேயராக வந்தால் சரி!" என்று பெருமிதமாக எண்ணியவாறு இரவு தூங்கச் செல்வாய். காலையில் உன்னை எழுப்புவதற்கு வந்த உன் துணைவி, “என்னங்க, பத்திரிகை பார்த்தீங்களா? க மேயருக்குப் போட்டி போடுறவுங்க பட்டியல் வந்திருக்கு" என்று சொன்னவாறு பத்திரிகையை உன் கையில் கொடுப்பார். நீ பத்திரிகையை வாங்கும் போதே உன் வாய் முணுமுணுக்கும். "ஏன் இப்படி பட்டியல் எல்லாம் போடு றாங்க! அண்ணா பார்த்து யாரை மேயர் என் கிறாரோ; அவர்தானே மேயர்!" என்றவாறு பத்திரிகையின் எட்டு கலத் தலைப்பை உற்று நோக்குகிறாய்? மேயர்தேர்தல்; பலத்த போட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_1.pdf/66&oldid=1691881" இலிருந்து மீள்விக்கப்பட்டது