பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் கடிதம் / 55 என்று கொட்டை எழுத்துக்களில் செய்தி காண்கிறாய்! இப்படியெல்லாம் செய்தி போடுவதற்கு நம்ப ஆளுகளே விட்டு விடுகிறார்கள்! இவர்கள் தங்கள் ஆசைகளை வளர விட்டது தான் இப்படி யெல்லாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு செய்தி போடும்படி ஆகிவிடுகிறது.” என்று கடுங்குரலில் கூறியவாறு, படுக்கையை விட்டு எழுந்து உடம்பிலுள்ள சோம்பலை முறித்துத் தள்ளி விட்டு மீண்டும் பத்திரிகையைப் படிக்கத் தொடங்கு கிறாய். ஒன்று, இரண்டு, மூன்று என்று மேயர் பதவி வேட்பாளர்களின் பெயர்களைப் படித்துக் கொண்டு வரு கிறாய்! ண திடீரென அதிர்ச்சி! உனக்கே ஒரு திகைப்பு! கார னம்; அந்தப் பட்டியலில் உன் பெயரும் இருக்கிறது! அடேடே! என் பேரைக்கூடப் போட்டிருக்கானே!' பத்திரிகையை விட்டு கண்களை எடுக்க முடியவில்லை உன்னால்! எத்தனையோ முறை; பலகாரத்தைச் சாப்பிட்டுக் கொண்டே; “இன்னைக்கு இட்லி பிரமாதம்' என்று மனைவியின் முகத்தைப் பார்த்தவாறுதான் புன் னகையுடன் கூறியிருக்கிறாய்! இட்லியைப் பார்த்துக் கொண்டே இட்லி பிரமாதம்” என்று நீ கூறியதே இல்லை. ஆனால் இப்போதோ- 66 "அடேடே என் பேரைக் கூடப் போட்டிருக்கானே!' என்று வியப்புடன் அல்லது வெறுப்புடன் மனைவி யின் முகத்தைப் பார்த்திருக்க வேண்டிய நீ, பத்திரி கையையே பார்த்துக் கொண்டிருக்கிறாய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_1.pdf/67&oldid=1691882" இலிருந்து மீள்விக்கப்பட்டது