பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 / கலைஞர் கடிதம் ஏன் இந்த மாற்றம் வந்தது உன் மனதில்! பத்திரி கைக்காரர் உனக்கு ஒரு பெரிய பதவியல்லவா கொடுத்து விட்டார். அதனால் உன் பெயரைத் திரும்பத் திரும்பப் படிக்கிறாய். நீ, உன் பெயரைத் திரும்பத் திரும்பப் படித்து தோள்கள் விம்மிட, விழிகள் மலர்ந்திட, இதழ் கள் துடித்திட, நின்றிருந்த கம்பீரமிக்க காட்சிகளை நான் பல முறை கண்டிருக்கிறேன். அது எப்போது தெரியுமா? இந்தி எதிர்ப்புப் போர்! அந்தப் போராட்டப் பட்டியலில் உன் பெயர்! விலைவாசி உயர்வுக் கண்டன மறியல்- அந்தப் போர்வீரர் வரிசையில் உன் பெயர்- மும்முனைப் போராட்டம்- அந்த அணியிலும் உன் பெயர். அந்தப் பட்டியலைக் கண்டபோது உன் முகத்தில் மலர்ந்த வீரங் கொழித்த சிரிப்பையும் வீங்கிப் புடைத்த தோள்களையும், பார்த்துக் களித்த எனக்கு; அந்த வரிசைப் பெயர்களில் என் பெயரும் முன்னோ பின்னோ இருந்தது கண்டு பெருமைப்பட்ட எனக்கு; இன்றைய உன் முகத்தில் காணும் புன்னகை இயற்கைப் புன்னகையாகத் தோன்றவில்லை. எதற் காகவோ செயற்கையாக வரவழைத்துக் கொண்ட தாகத் தெரிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_1.pdf/68&oldid=1691883" இலிருந்து மீள்விக்கப்பட்டது