பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 / கலைஞர் கடிதம் பணிபுரியத் துடித்தெழு! பதவிபெறப் பொறுத்திரு! உன் நெஞ்சுக்கு நீ உணர்த்த வேண்டிய அறிவுரை இஃது! கசக்கிப் பிழிந்து ஒன்றை நீ பெற்றுவிடலாம்-அதை பெற்ற உனக்கும் நிறைவு இல்லை! தந்தவருக்கும் மகிழ்ச்சி இல்லை. காலைப் பத்திரிகை-உன்னை என்ன பாடு படுத்தி விட்டது பார்! நீ கேட்டது ஒரு மேயர்! அண்ணா சந்திக்க வேண்டியது பத்து மேயர்களை! ஜனநாயகத்தில் பெரிய தொல்லை; ஒரு சமயத்தில் ஒருவரைத்தான் மேய ராக்க முடிகிறது மற்ற ஒன்பது பேர் விடப்பட்டு விடுகிறார்கள். ஆகவே; நண்பா-அந்தப் பொறுப்புமிகு வேலையை அண்ணாவிடம் விட்டுவிடு! நீ துணைக்குச் செல்ல வெண்டியதில்லை! நேரம் - நிலை -இவைகளுக்கேற்ப நேர்த்தி யான முடிவு எடுக்க நமது அண்ணாவுக்குத் தெரியும்". அது உனக்கும் தெரியும்; ஆனாலும் “கேட்டு வைப் போமே! என்று கருதுகிறாய்! உன்னைப் பற்றிய நல்ல எண்ணத்தைக் கெடுத்து. வைக்காதே!" என்று நான் உனக்குக் கூறுகிறேன். அன்புள்ள மறவன் 9.11.68

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_1.pdf/70&oldid=1691885" இலிருந்து மீள்விக்கப்பட்டது