பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் கடிதம் / 6I மாறுபட்ட கருத்துக்கொண்ட தலைவனையோ, தொண் டனையோ கொன்று புதைத்து விட்டு- அவர்கள் கல்லறை யின் மீது- கொலை வெறியன், வெற்றிக் கொடியைப் மீது-கொலை பறக்க விடுவானேயானால்; அந்த இடுகாட்டில் புதைந்து கிடக்கும் எலும்புக்கூடுகள் அவன் முகத்தில் காரித் துப்பும்! முண்டா தட்டுதல்- மீசை முறுக்குதல்- அரசியலுக்கு ஏற்றதல்ல! துப்பாக்கி தூக்குதல் -கத்தி எடுத்தல்- காட்டு மிராண்டிகள் கூட கடைப்பிடிக்க அஞ்ச வேண்டிய அரசி யல் முறையாகும்! அரசியல் வன்முறையைத் தூண்டி விடுகிற கருத்துக்கள் ஒழிந்தாக வேண்டும். வெறுப்பு உணர்ச்சியை வளர்த்து மனிதாபிமானத்தை வேரறுக்கிற எழுத்துக்கள்—பேச்சுக் கள்-அடியோடு அகற்றப்பட்டாக வேண்டும். - கருத்துக்களில்- கொள்கைகளில்-போக்குக்களில் - காணப்படுகிற குறைபாடுகளை கடுமையாக விமர்சிப் பதிலோ; கண்டனங்களைப் பொழிவதிலோ;உண்மையான அரசியல் வாதி, பின்வாங்கத் தேவையில்லை. ய மாற்றார் நெஞ்சத்தில் தனது கருத்துக்களை ஆழப் பதிய வைத்து அவரைத் தன் பக்கம் இழுப்பவன் நேர்மை யான அரசியல்வாதி! அதிலே தோல்வி கண்டு தொடையைத் தட்டுபவன் ஏழாந்தர அரசியல்வாதி! கண்ணில் கனலும், கையில் கத்தியும், அரசியல் ஆயுதங்கள் எனக் கருதிடுவோர் எங்கிருந்தா லும் அந்த நாடு, விலங்கினங்கள் வாழும் காட்டை விடக் கீழானது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_1.pdf/73&oldid=1691888" இலிருந்து மீள்விக்கப்பட்டது