பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66/ கலைஞர் கடிதம் லவை நாடாளுமன்றம்; கருத்துக்களை மோத விட்டு, நல் எது அல்லவை எது என்பதை அங்குள்ள பெரும் பான்மை பலம் தீர்மானிக்கத் தவறினாலும். நாட்டு மக்கள் புரிந்து கொண்டு அடுத்து வரும் பொதுத் தேர் தலில் தீர்ப்பளிக்கக் கூடிய அளவுக்கு அவர்களைத் தயார் படுத்தப் பயன்படும் அவையாகும்! சட்டப்பேரவைகள்-மேலவைகள்- நாடாளுமன்றம்- சுவையும் குன்றாத வாதங்கள், கருத்துப் போராட்டங்கள் நிரம்ப இருக்கலாம். மாநிலங்கள் அவை-அனைத்திலும் சூடும் ஆனால், ஒரு ஜனநாயக அவை, கூச்சலிலும் குழப்பத் திலும் முடிந்தது என்பதை யாரும் வரவேற்க முடியாது! “ஆகா! இந்திரா காந்தியைப் பேசவிடாமல் உட்கார வைத்து விட்டார்கள்" இது, காங்கிரசல்லாத மற்றவர்களிடத்திலே எல்லோருக் கும் இல்லா விட்டாலும் சிலருக்கு மகிழ்ச்சியைஏற்படுத்தக் கூடும். பிரதமரைப் பேசவிடாமல் தடுத்து,கூச்சலிட்டதும் குந்த வைத்ததும் 'அபாரமான சாதனை' என்று கூடப் பேசி விடலாம். ஆனால், நல்லோர் கட்டிக் காக்க விரும்புகிற அமைதி யான ஜனநாயகத்தின் வருங்கால நிலை என்ன? அம்மையாரைத் தமது கருத்துக்களை முழுமையாகச் சொல்ல இடமளித்து; அவை திருப்தியளிக்கத் தக்கவை யல்லவென்றால் அதன்பிறகு அந்தக் கருத்துக்களுக்கு மறுப்புரைக்கும் வாய்ப்பு, தீர்மானம் கொண்டு வந்த உறுப்பினர்க்கு இருக்கிறது. வெளி நடபபு மூலம் தங்கள் அதிருப்தியைக் காட்டிக் கொள்ளும் உரிமை இருக்கிறது. பெரும்பான்மை பலத்தை வைத்துக்கொண்டு எதிர்க் கட்சியின் நியாயமான வேண்டுகோளைத் துச்சமெனத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_1.pdf/78&oldid=1691893" இலிருந்து மீள்விக்கப்பட்டது