பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 | கலைஞர் கடிதம் என்று எழுதவில்லையா? மூலைக்கு மூலை பேசித் திரிய வில்லையா? "காராப்பூந்தி சாப்பிட்ட பையனுக்கு தொண்டையில் காராப்பூந்தி சிக்கியதால் ஆஸ் பத்திரியில் அனுமதி! கழக ஆட்சியின் கொடுமை பாரீர்!" இப்படி யெல்லாம் செய்திகளைத் தேடிக் கண்டு பிடித்து தி. மு. க.ஆட்சி மீது குறைகூறும் ஏடுகளும், பேச்சாளர்களும் சத்தியமூர்த்தி பவன் தரும்'சர்டிபிகேட்' டுகளுடன் வலம் வருகின்ற காட்சியை நாடு காண்கிறது. தஞ்சை மாவட்டத்திலும் மற்றும் சில மாவட்டங் களிலும் அரசின் சார்பில் அரிசி கொள்முதல் செய்யப் பட்டு வாங்கிப் புசிப்போர் அதிகமுள்ள இடங்களுக்கு - நியாய விலையில் விற்பனை செய்ய அனுப்பி வைக்கப் படுகிறது. அந்தக் கொள்முதலில் தங்களுக்கு 'விலை' கட்டுபடி யாகாதென்று ஒரு சில நிலப் பிரபுக்கள்; உயர்நீதிமன்றத் தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். அதனையேற்றுக் கொண்டு, அந்நிலப் பிரபுக்களைப் பொறுத்தவரையில் கொள்முதல் செய்யத் தடைவிதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பைக் கொட்டை எழுத்தில் வெளி யிட்டு; காங்கிரஸ் ஏடுகள் மகிழ்ச்சியால் துள்ளுகின்றன, அரசாங்கத்திற்கு எதிராக ஒரு தீர்ப்பு கிடைத்துவிட்ட தாக காங்கிரசுக்காரர்களுக்குப் பூரிப்பு! . எல்லா மக்களுக்கும் உணவு வழங்க வேண்டுமென்று அரசு எடுத்துள்ள முயற்சியில் நிலப்பிரபுக்கள் சிலரது போக்கால் ஒரு குறுக்கீடு ஏற்பட்டுவிட்டதே என்று வருந்துவதற்குப் பதிலாக, அவர்கள் புளகாங்கிதமுறுகிறார் கள் என்றால் என்ன பொருள்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_1.pdf/82&oldid=1691897" இலிருந்து மீள்விக்கப்பட்டது