பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 / கலைஞர் கடிதம் “மில் அரிசி - கைப்பற்றுதல் கட்டட சோதனை! தமிழக அரசு நடவடிக்கையை ஹைகோர்ட் ரத்து செய்தது! மில் வர்த்தகர்களின் 'ரிட்' அனுமதி.” இது தலைப்புச் செய்தியாகும். உள்ளே பிரசுரித்துள்ள விஷயத்தைப் படித்துப் பார்! “உணவு அமைச்சரிடமிருந்து வாய் மொழியாக உத்தரவு பெற்றுக் கட்டட சோதனையும் மில் அரிசிக் கைப்பற்றுதலும் நடந்தன என்று உணவு இலாக்கா காரியதரிசி கூறியதற்கு ஆதாரமில்லை யென்று கூறி, மில் வர்த்தகர்களின் 'ரிட்' மனுக்களை ஹைகோர்ட் அனுமதித்தது” இதுதான் நண்பா; நவசக்தி பிரசுரித்துள்ள செய்தி! இதைப் படிக்கும்போது உணவு அமைச்சர் மதியழகன் அவர்கள் தான் வாய் மொழியாக உத்திரவிட்ட தாகக் கோர்ட்டில் சொல்லப்பட்ட தென்று நீகூடக் கருதிக் கொள்வாய்! ஆமாம்; நவசக்திச் செய்தி அப்படித்தான் உருவகப் படுத்தப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தில் செல்லாது என தீர்ப்பு கூறப்பட்டது எந்த உத்திரவின் பேரில் தெரியுமா; உனக்கு? 1966 ஆம் வருஷத்திய சென்னை நெல் அரிசி லைசென்ஸ் உத்திரவுதான் அது என்ற விபரத்தை மற்ற ஏடுகள் பிரசுரித்திருக்கின்றன. அப்போது உணவு அமைச்சராக இருந்தவர் திரு. ராமய்யா அவர்கள் ஆவார்கள். நவசக்தி செய்தியில் 1966 என்பதும் அமைச்சர் ராமய்யா என்பதும் மறைக்கப்பட்டு விட்டது. படிக்கிறவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_1.pdf/84&oldid=1691899" இலிருந்து மீள்விக்கப்பட்டது