பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் கடிதம் /73 கள்; மாண்புமிகு மதியழகன் என்று எண்ணிக் கொள்ளட்டுமே யென்று ஒரு நப்பாசை! அதனால்தான் தலைப்பில்; "தமிழக அரசு நடவடிக்கையை ஹைகோர்ட் ரத்து செய்தது" என்று கொட்டை யெழுத்துக்கள் மின்னுகின்றன அதிலே ஒரு திருப்தி! அதிலே ஒரு மகிழ்ச்சி! மகன் இறந்தாலும் பரவாயில்லை; மருமகள் மாங்கல்யம் இழந்தால் போதும் என்று மாமி யாருக்கு ஏற்படுகின்ற ஆசை; தமிழ் நாட்டில் உள்ள காங்கிரசாருக்கு ஏற்பட்டி ருக்கிறது! எண்ணம்! பாவம்; வாழட்டும் அவர்களின் நல்ல (?) அன்புள்ள மறவன் 16.11.68

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_1.pdf/85&oldid=1691900" இலிருந்து மீள்விக்கப்பட்டது