பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளம்பிற்றுக்காண் தமிழச் சிங்கக் கூட்டம்! அன்பு நண்ப, தி.மு.க ஜனநாயகத்தின் முகாம். தி.மு.க. தமிழ் வளர்க்கும் பாசறை. தி.மு.க. இந்தி எதிர்ப்பின் கூடாரம். தி. மு. க. சமத்துவத்தின் தாழ்வாரம். . தி. மு. க. நல்லாட்சியின் வழிகாட்டி. தி.மு.க. மறுமலர்ச்சியின் தூதுவன். அன்பகத்தில் நேற்றுக்கூடிய சென்னை மாணவர்களின் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு முழங்கினர். கழகத்திற்கும் மாணவர்களுக்கும் நீண்ட நெடு நாட் களாக இருந்துவரும் பாசப் பிணைப்பையும், அதனை இடை யிலே அறுத்தெறிய முயன்ற சிலர் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டதையும் அவர்கள் விரிவாக விளக்கிப் பேசி னர். காங்கிரசின் பக்கம் மாணவர்கள் தொகை தொகை யாகப் போய்ச் சேர்ந்துவிட்டார்கள் என்ற தப்புக் கணக் கின் உண்மை உருவத்தையும் அவர்கள் படம் பிடித்துக் காட்டத் தவறவில்லை. "தமிழ் வாழ்க! இந்தி ஒழிக!-என்று முழங்கியதற் காகத் துடிக்கத் துடிக்கச் சுட்டுக் கொல்லப்பட்ட சிவ கெங்கை மாணவ வீரன் ராஜேந்திரனின் நினைவு எங்கள் நெஞ்சில் பதிந்திருக்கும் போது துப்பாக்கித் துரைத்தனம் நடத்திய காங்கிரசை நோக்கி மாணவர்கள் அணி செல் கிறது என்பதை யார் தான் நம்புவார்கள்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_1.pdf/86&oldid=1691901" இலிருந்து மீள்விக்கப்பட்டது