பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் கடிதம் / 75 என்று உள்ளம் உருக ஒரு மாணவ நண்பர் பேசிய போது; மாணவச் சிங்கம் ராஜேந்திரனின் குரலே எதி ரொலித்தது போலிருந்தது. “மாயூரம் மண்ணிலே, தன் மாம்பழ மேனிக்கு நெருப்பு வைத்துக் கொண்டு ஊனும் உயிரும் தீயிலே கருகிக் கொண்டிருந்த நேரத்திலும் "என் சாம்பலிலே தமிழ் மணக்கட்டும் என எக்காளக் குரல் கொடுத்து அன்னைத் தமிழே! நீ வாழ்க! எங்களை அடிமை கொள்ள வரும் இந்திஆதிக்கமே! நீ வீழ்க!” என்று ஒலித்தவாறு கல் லறைக்குச் சென்றானே; கண மணி சாரங்கபாணி; அவன் உடலிலும் எங்கள் உள்ளத்திலும் நெருப்பு மூளக் காரண மாயிருந்த நெருப்பினுங் கொடிய காங்கிரசாரிடமா மாணவ நண்பர்களுக்குப் புதிய அன்பு பிறந்துவிடும்? இல்லை! இல்லவே இல்லை! என்றைக்கும் தமிழுக்குத் துரோ கம் செய்யும் சிலர் அங்கே இருக்கிறார்கள். அவர்களுக்குக் கல்லூரியில் கிடைக்கும் சில மறைமுக ஆதரவுகள் கிடைத்துக் கொண்டு வருகின்றன. எங்கள் அணி சிதற வில்லை. எங்கள் வரிசை குலையவில்லை. எங்கள் அண்ணன் மீதும், கழகத்தின் ஏனைய தலைவர்கள் மீதும் நாங்கள் கொண்டுள்ள நேசமும் பாசமும் குறையவில்லை!' என்று அந்த இளஞ்சிங்கக் கூட்டம் அன்பகத்தில் அறிவித்தபோது ஏற்பட்ட உணர்ச்சிப் பிரவாகத்திற்கு அளவே இல்லை நண்பா; அளவேயில்லை! அன்பகத்தின் முகப்பிலே எழுச்சி வடிவிலே அமைக் கப்பட்டிருக்கும் மாணவர் மொழிப் புரட்சியின் அடை யாளச் சின்னத்தை நீ பார்த்திருப்பாயே அடிக்கடி. 6 "குண்டடிப்பட்டு ஒரு மாணவன்-அவனைக் கீழே விழாமல் தாங்கியவாறு வீரங் கொப்பளிக்கக் கையிலே கொடியைப் பிடித்தவாறு ஒரு மாணவன். ரத்தங் கொட்டக்கொட்டத் தரையிலே கிடக்கும் ஒரு மாணவன். அப்போதும் கரத்திலே அழுத்தமாகப் பிடித்திருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_1.pdf/87&oldid=1691902" இலிருந்து மீள்விக்கப்பட்டது