பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 / கலைஞர் கடிதம் வும்,புதுப்பிக்கவும் மாநில அளவில் தி.மு.க.வை உருவாக்க வும், ராஜாமுகமது அவர்களை அமைப்பாளராகக் கொண்டு, தற்காலிக அமைப்புக் குழு நிறுவப் பெற்றது. அந்தக் குழு, மாவட்டங்களில் தொடர்பு கொள்ள, மாணவ நண்பர்களின் பட்டியலைத் தயாரித்துள்ளது. "பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறக்கப் பட்டது சிறுத்தையே வெளியில் வா!” பாவேந்தரின் புரட்சிக் கவிகேட்டு, செயல் புரியக் கிளம் பிய மாணவர் அணி- "கிளம்பிற்றுக் காண் தமிழச் சிங்கக் கூட்டம்!” என்ற அவரது வீர வரிகளுக்கு இலக்கணமாய்த் திகழும் மாணவர் வரிசை- தன் அமைப்பினைப் புதுப்பித்துக்கொள்ள ஆர்த் தெழுந்து விட்டது! "மாணவ நண்பனே! எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் புலியெனச் செயல் செயப் புறப்படுவாய்” என, நாமும் வாழ்த்தி வரவேற்போம். அன்புள்ள மறவன் 18.11.68

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_1.pdf/90&oldid=1691905" இலிருந்து மீள்விக்கப்பட்டது