பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“தீராதி தீரர்- தேசீய மகிபர்- பராக்! பராக்!" அன்பு நண்ப, “ஜமீன்தார் ஜாகீர்தார் நம்மிடமில்லை. மிட்டா மிராசுகள் நம்மிடமில்லை ஆலை அரசர்கள்-பண முதலைகள் நம்மிடமில்லை.இதற்குக் காரணம்,நாம் ஏற்றுக் கொண்டுள்ள சமதர்ம லட்சியந்தான்.” இப்படி யொரு வாசகம் எந்த ஏட்டிலே வெளி வந் திருக்கும் என்று நீ கருதுகிறாய்? இந்த வாசகத்தை தீட்டி வெளிவந்துள்ள ஏடு எது என்று ஒரு கேள்வியைக் கேட்டு பரிசுப் போட்டி ஒன்று வைத்தால்; அந்தப் போட்டியில் கலந்து கொண்டு விடை எழுதிய ஒருவர்கூட சரியான பதிலைச் சொன்னதற்காகப் பரிசுபெற முடியவே முடி யாது. காரணம் என்ன? ய இந்த வாசகத்தைப் படிக்கிற யாருக்கும்; “இது நம்நாடு இதழில் வந்திருக்கும்" 66 அல்லது முரசொலியில் எழுதப்பட்டிருக்கும்" “மாலைமணி ஏட்டில் வெளியிடப்பட்டிருக்கும் "மறவன் மடலில் தீட்டப்பட்டிருக்கும்" 'ஒருவேளை ஜனசக்தியாக இருக்கும்” என்ற வகையிலேதான் பத்திரிகைகளின் பெயர்கள் நினைவுக்கு வரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_1.pdf/91&oldid=1691906" இலிருந்து மீள்விக்கப்பட்டது