பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் கடிதம் / 83 செல்வக் குபேரர் ஏழையினும் ஏழை- எளிமையினும் எளிமை எங்கள் சேனையின் தங்கத் தளபதிகள் பராக்! பராக்!!" என்று காங்கிரசிலேயுள்ள பிரச்சாரகர்கள் கூவிட; அதி ஆடம்பரமாக நடைபெறுகிற காங்கிரஸ் தர்பா ருக்குப் பெயர்; ஏழைகளின் மன்றமாம்! எத்தர்கள் கூறுகிறார்கள்; இன்றும் ஏமாளிகள் இருக் கிறார்கள் நம்புவதற்கு; என்ற எண்ணமுடன்! இதனை நீ மட்டும் தெரிந்து கொண்டால் போதாது; நண்பா - மற்றவர்க்கும் தெளிவு படுத்து! அன்புள்ள மறவன் 31-10-68

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_1.pdf/95&oldid=1691911" இலிருந்து மீள்விக்கப்பட்டது