பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுதையும் - பன்றியும் அன்பு நண்ப, “இந்திய ஜனநாயகத்தில் வயது 21 ஆகி விட்டால் எந்தக் கழுதையும் மந்திரியா கலாம். தமிழ் நாட்டில் மந்திரிகள் பிளாட் பாரங்களில் இருந்தும்-கோயில்களில் இருந் தும் கோட்டைக்குள் நுழைந்திருக்கிறார்கள்." இப்படியொரு காங்கிரஸ் தலைவர், தனது ஏட்டில் எழுதி யிருப்பது பற்றி நீ கொதிப்படைந்து எனக்கு எழுதி யுள்ள மடலைப் படித்தேன். அந்த நண்பரின் இயல்பு தெரியாமல் நீ இவ்வளவு கோபப்பட்டுக் கொந்தளித் திருக்க வேண்டியதில்லை. அந்த நண்பர் கண்ணதாசன் தி.மு. கழகத்தில் இருந்த போது பேசிய பேச்சுக்களையும் எழுதிய எழுத்துக்களையும் அறிஞர் அண்ணா அவர் கள் கடுமையாகக் கண்டித்த காரணத்தால் தான் அவரது தோழர் சம்பத்தின் மனம் புண் பட்டு இருவருமாகச் சேர்ந்து புதுக் கட்சி ஆரம்பித்து; அதற்கு ஓராண்டில் ஈமக் கடன் செய்து முடித்தார்கள். "காமராஜரே! உமக்கு ஆனாவுக்கு அடுத்த எழுத்து என்ன வென்ற 'று தெரியுமா? திருக்குறள் என்பது ஒரு ஊரா? அல்லது நதியா? என்று காமராஜரைக் கேட்டுக் கடுமையாகத் தாக்கினர். "எருமைக் குரலோன் சிவாஜி கணேசன்; கட்ட பொம்மன் படத்தில் "கத்தோ கத்து' என்று கத்துகிறான்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_1.pdf/96&oldid=1691912" இலிருந்து மீள்விக்கப்பட்டது