பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் கடிதம் / 85 என்று சிவாஜிக்கு அர்ச்சனை செய்து தனது வாரப் பத்திரிக்கையில் நாலுபக்கம் கட்டபொம்மனைக் கண்டித்து எழுதினார். “பக்தவத்சலம் மகளும், அழகேசன் மனைவியும், காலையிலே கிராம சேவைக்கு என்று புறப்படுகிறார்கள். மாலையிலே திரும்பி வரும்போது சேலையிலே. என்று கர்ண கடூரமாகத் திருக்கழுக்குன்றம் கூட்டத்திலே பேசினார். இப்படியெல்லாம் பேசுவதையும், தி.மு.க. தலைவர்கள் கண்டித்தார்கள். “பாதக் குறடு எடுத்துப் எழுதுவதையும் பண்டித நேருவை பன்னூறு அடி அடிப்போம்" என்று கவிதை தீட்டினார். அந்தக் கவிதை வந்த மலரை வெளியிடக்கூடாதென்று விட்டார்கள். தன்னைக் கண்டிப்பதா? அண்ணா அவர்கள் தடுத்து தனது புனித எழுத்துக்களுக்குப் பூட்டுப்போடுவதா முடியாது! முடியாது! சாக்கடைத் தமிழை என்னால் விடமுடியாது! அதனை வரவேற்கும் இடம் நோக்கிப் போகிறேன்; என்று அந்த நண்பர்; காங்கிரசுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறார். காங்கிரசில் அவரைக் கண்டிப்பார் கண்டிப்பார் இல்லை. ஏன் என்று கேட்பார் இல்லை. எச்சில் இலைகள் விழும் குப்பைத் தொட்டி; தன் வாய்க்குள்ளே என்னென்ன பொருள்கள் வந்து விழுகின்றன என்பது பற்றிக் கவலைப்படுவதில்லை வயிறு உப்பி விட்டால் போதும் என்று 'சிவனே' என்று இருக்கிற தல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_1.pdf/97&oldid=1691913" இலிருந்து மீள்விக்கப்பட்டது