பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86/ கலைஞர் கடிதம் "எந்தப் பிள்ளை நல்ல பிள்ளை? என்றானாம்! "அதோ கூறையிலே கொள்ளி வைக்கிறதே அந்தப் பிள்ளை தான்” என்றானாம் மற்றொருவன்! அது போல, கட்சிக் கட்டுப் பாட்டை. பதவி வெறிக்காக மீறிய ஒரு பதரை; காங்கிர சில் சேர்த்துக் கொண்டு கும்மாளம் போடுகிறார்கள். அப்படிப்பட்ட முகாமில்; அடங்காப்பிடாரிகளுக்கு கட்டுப்பாடு ஏது? அதனால்தான்; தி. மு. கழக அமைச்சர்களை 'கழுதை கள்' என்று நண்பர் வர்ணிக்கிறார். அந்த நண்பர்; தன்னைப்பற்றியே ஒரு அழகான கட்டுரையை அவரது இதழில் எழுதியிருக்கிறாரே; நீ படிக்கவில்லையா? "நீ பன்றியாகக் கடவாய் ! என்று ஒரு அரசன் சபிக்கப்பட்டான். சாபம் பெற்ற அரசன், தன் மகனை அழைத்து; "மகனே! மன்ன னாக வாழ்ந்த நான் பன்றியாக வாழ விரும்ப வில்லை. ஆகவே நான் பன்றியாக மாறியதும் என்னை வெட்டிக் கொன்றுவிடு! என்று கேட்டுக் கொண்டான். மகனும் சம்மதித்து; தந்தை- பன்றியாகும் சமயத்தை எதிர்பார்த்திருந்தான். அரசன், பன்றியாகி விட்டான். மகன், பன் றியை வெட்ட வந்தான். பன்றி சொன்னது; 'மகனே! இந்த வாழ்க்கையும் எப்படியிருக்கிறது என்று பார்த்து விடுகிறேன்! அடுத்த ஆண்டு வந்து என்னைக் கொன்றுவிடு” என்று! சரி என்று மகன் போய் விட்டான். ஓராண்டு முடிந்து தந்தைப் பன்றியைக் கொல்ல இளவரசன் வந் தான். எங்கும் தேடினான். கடைசியில் கண்டு பிடித்தான். தந்தைப் பன்றி; ஒரு பெண்பன்றி யுடனும் சில குட்டிகளுடனும், சகதியில் படுத் திருந்தது. தந்தைக்கு அளித்த வாக்கின்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_1.pdf/98&oldid=1691914" இலிருந்து மீள்விக்கப்பட்டது