பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 கலைஞர் படித்த வாலிபர்கள் குறுக்கிட்டு சோதிடரிடம் யாரும் வம்பு செய்யக் கூடாது எனத் தடுத்துவிட்டனர். கலவரம் நின்றது என்றாலும் சோதிடரின் பிழைப்பு குறைந்தது. சோதிடர் மலையூரை விட்டுக் கிளம்பி, பக்கத்தி லுள்ள சிறிய நகரமான அலையூருக்குச் சென்றார். அங்கு பெரிய மரத்தடியில் தன் சோதிடக் கடையை ஆரம்பித் தார். குருவி சோதிடம், ரேகை பார்த்தல், கிளி சோதிடம் இப்படிப் பலவகையான ஏமாற்று வேலை களுடன் சோதிடத் தொழிலை நடத்தினார். அவரிடம் சோதிடம் கேட்க, அந்தப் பகுதியில் உள்ள வேலையற்றவர்கள் எல்லாம் வருவது வழக்க மாயிற்று. வருமானம் பெருகிற்று சோதிடருக்கு! விளம் பரத்திற்காகப் பல சிறுவர்கள், சிறுமிகள் வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள். அவர்கள் ஊரெல்லாம் போய் சோதிடரின் மகிமையைச் சொல்லி ஆட்களைச் சேர்த் தார்கள். கம்பீரமாக இந்தப் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்த ஒரு கிழவர் கிளம்பினார். அவருக்கு வயது தொண்ணூற்றி ஐந்து! ஆனாலும் வாலிபரைப் போல இருப்பார். பந்தயக் குதிரைபோல நடப்பார். அவர் சோதிடரின் புளுகுகளை நம்பவேண்டாமென்று மக்களைக் கேட்டுக்கொண்டார். அந்தக் கிழவர், சோதிடர் உட்கார்ந்து தொழில் நடத்தும் மரத்துக்கு அருகாமை யிலேயே ஒரு மேடை போட்டுக்கொண்டு சோதிட எதிர்ப்புப் பிரச்சாரம் செய்தார். பொய்களை நம் பாதீர்! சோதிடர் ஜாக்கிரதை" என்று முழங்கினார். 6 F சோதிடருக்குக் கோபம் வந்தது. பகுத்தறிவுக் கிழவரைப் பார்த்து “நீ சீக்கிரம் சாகப் போகிறாய் என்று என் குருவி சொல்கிறது!" என்றார்.