பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடி தம் 99 கிழவர் சிரித்துக் கொண்டே “எனக்கு தொண்ணூற்றி ஐந்து வயதாகிறது. நான் நூறு வயது வரை வாழ்வேன். இன்னும் ஐந்தாண்டு எனக்கு அழிவில்லை" என்று பதில் சொன்னார். ஓகோ! நூறாண்டு வாழ விரும்புகிறாயா? அது தான் முடியாது. என் சோதிடப்படி இன்னும் ஐந்தே மாதங்களில் செத்து விடுவாய்" என்றார் சோதிடர். சோதிடர் சொல்வது பலிக்கும் என்று அவரது சீடகோடிகள் நம்பினார்கள். ஆனால் அந்தக் கிழவர் உடம்போ, மேலும் மேலும் உறுதியாக ஆயிற்று. ஐந்து மாதங்கள் ஓடின. ஐம்பது மாதங்கள் ஓடின. ஏன்? ஐந்து வருடங்களும் அநேகமாக ஓடிவிட்டன. நூறாண்டு முடிய கிழவருக்கு இன்னும் ஐந்தாறு வாரங்கள் தான் பாக்கி! அந்த ஐந்தாறு வாரங்களும் முடிந்தால் அவர் நூறு வயதுக் கிழவராவார். . சோதிடர், இப்போது கிழவரைப் பற்றிப் பேசு வதேயில்லை. அவர் சோதிடம் பலிக்கிறதா என்று ஒரு வருடம் வரையில் பார்த்தவர்கள், பிறகு கிழவரின் பக்கம் சேர்ந்துகொண்டு சோதிடரைக் கேலி பேசத் தொடங்கி விட்டார்கள். சோதிடரிடம், இப்போது அவரது சீடர்களைத் தவிர, வேறு யாரும் மக்கள் கூட்டம் கிடையாது. ஒருநாள் பிரச்சாரம் கிழவர் கிழவர் மேடையில் நின்று அறிவுப் செய்து கொண்டிருந்தபோது, வேகமாக வந்த லாரி மேடை மீது மோதிக் கிழவரைத் தூக்கி எறிந்தது. கீழே விழுந்த கிழவர், எழுந்து தள்ளாடி நடக்க முயன்றார். அப்போது, சோதிடர் அமர்ந்திருந்த மரத் தின் பெரிய வேர் ஒன்று அவர் காலில் தடுக்கியது. மீண்டும் கீழே விழுந்தார். தலையில் அடிபட்டு அந்த