பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 105 த ஏழு மாதங்களுக்குப் பிறகு இப்போதுள்ள திநில விபரமென்ன என்பதையும் உனக்குத் செரி வித்தி- விரும்புகிறேன் வரப்போய், அதைத் தூக்கி தவறான செய்திகள் ஒரு ஏட்டில் வைத்துக்கொண்டு சில மாலை ஏடுகள் அவதூறு பரப்பி ஆட்டம் போட்ட காரணத்தால்தான்; நானும், பொதுச் செயலாளரும், பொருளாளரும் கலந்து பேசி, இதன் தொடர்பான விளக்கங்களை உனக்கு அறிவித்தி- வேண்டுமென .முடி வெடுத்தோம். அந்த முடிவின் விளைவே இந்தக் கடிதம்! 1976 ஜூன் திங்களில் இரண்டு லட்சத்து முப்பத்தி ஆறாயிர ரூபாயாக இருந்த, வழக்கு நிதி, இப்போது ஆறு லட்சத்து ஐம்பதாயிர ரூபாய் என்கிற அளவுக்கு உயர்ந் திருக்கிறது கழகத்தினர் மீது வழக்குகள் அடுக்கடுக் காகப் போடப்பட்டதும், அதனைச் சமாளிக்க ஆர்வத் துடன் உன்னைப் போன்ற உயிரனைய உடன்பிறப்புக்களும், தமிழ்ப் பெருங்குடி மக்களும் நேரிலும் பணவிடை த் தாள்களின் மூலமும் வழங்கிய தொகை, அந்த அளவை எட்டியிருக்கிறது. வழக்குகள் முடிவுற்ற பிறகு எல்லா வழக்குகளுக்கும் எந்தெந்த வகையில் எவ்வளவு சல வாயிற்று என்ற கணக்குகளைக் கழகத்தின் தணிக்கைக் குழு ஆய்வு செய்து, செயற்குழு- பொ பொதுக் துக் குழுக்களில் வைக்க இருக்கிறது. , தேர்தல் நிதியாக 976 ஜுன் திங்களில் இருபத்தி ஒன்பது லட்சத்து நாற்பதாயிர ரூபாய் வங்கியில் இருந்தது அதில் பத்து லட்ச ரூபாயை கடந்த டிசம்பர் திங்களில் செயற்குழு உறுப்பினர்களின் ஒப்புதலோடு தி.மு.க. அறக்கட்டளைக்கு நிதியாக வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் தி.மு.க. அறக்கட்டளை சார்பில் அண்ணா சாலையில் அண்ணா அறிவாலயம்” ஒன்றை அமைக்க 1972 ஆம் ஆண்டில் சுமார் பத்து லட்ச ரூபாய் விலையில் ஒரு பெரிய இடம் வாங்கப்பட்டிருப்பது உனக்கு தெரியும்.