பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 107 கிறார்கள். அவர்களின் மாதாந்திர ஊதியம், தொலை பேசிக் கட்டணம், அஞ்சல் செலவு, பெட்ரோல் செலவு கள்-இந்த விபரங்களின்படி மாதந்தோறும் எட்டாயிரம் ரூபாய்க்குக் குறையாமல் ஆகிறது. "மிசா கைதி’சளாக ஓராண்டு காலம் சிறையி லிருந்த நமது கழகக் கண்மணிகள்; வசதியற்ற நிலையிலே உள்ளவர்களின் குடும்பங்களுக்கு அவர்களின் முறை யீட்டுக் கடிதங்களை அடிப்படையாகக் கொண்டு மாதந் தோறும் இருநூறு ரூபாய் வீதம் நூற்றி இருபத்தி நான்கு குடும்பங்களுக்கும், நூறு ரூபாய் வீதம் இருபத்தி மூன்று குடும்பங்களுக்கும் அனுப்பிய வகையில் ஒரு லட்சத்து எண்பத்தி எட்டாயிர ரூபாய் செலவாகியுள்ளது. இவ்வளவு விளக்கங்களுக்கும் பிறகு கழகத்தின் தேர்தல் நிதியைப் பற்றி உனக்கு ஒரு தெளிவு ஏற்பட் டிருக்குமென்று நம்புகிறேன். இன்னுமொன்றைச் சொன்னால், நீ அதிர்ச்சி அடைவாய் 1972-73 ஆம் ஆண்டுக்கு பதின்மூன்று லட்ச ரூபாய் வருமான வரி கட்ட கட்ட வேண்டுமென்று வருமான வரி இலாக்கா நெருக்கிக் கொண்டிருக்கிறது. தாடர்ந்து 1973 1974, 1974-1975, 1975-1976ஆம் ஆண்டுகளுக் சான வருமானவரி தாக்கீதுகளும் தலைமைக் கழகத்திற்கு வரலாம். இந்தியாவில வேறெந்த அரசியல் கட்சிக்கும் வருமான வரி விதிக்கப்படுவதாக நானறிந்தமட்டில் தெரியவில்லை. அதிலும் போலும்! தி. மு. கழகத்திற்குத்தான் சோதனை வருமான வரி கட்டத் தேவையில்லையென்று கழகச் சார்பில் 'அப்பீல்' அப்பீல்' செய்து கொண்டிருக்கிறோம். அதற்