பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தி எதிர்ப்பு வீரர்! உடன்பிறப்பே, "He would emphatically say the people should necessarily learn. Hindi if they had faith in national integration." மத்தியப் பேரரசின் நிதியமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் கடந்த நவம்பர் திங்கள் 14-ஆம் நாள் சென்னையில் ஆற்றிய உரை ‘இந்து’ ஏட்டில் வெளி வந்துள்ளதைத்தான் மேலே சுட்டிக்காட்டியிருக்கி றேன். ஏடு “இந்திய ஒருமைப்பாட்டில் நம்பிக்கை கொண்டவர்களானால் அந்த மக்கள் அவ சியம் இந்தி மொழியைக் கற்றுத் தீரவேண் டும்" என்று அவர் று வலியுறுத்திக் கூறினார். (சி. சுப்பிரமணியம்) இப்படி ஒரு செய்தியை நவம்பர் திங்களில் "இந்து வெளியிட்டபொழுது அல்லது இப்படி ஒரு கருத்தை மாண்புமிகு சுப்பிரமணியம் திட்டவட்டமாக அறிவித்தபோது இவ்வளவு அவர்கள் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று அவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. இந்தியாவில் நெருக்கடி நிலையென்று 1975 ஜூன் 25 ஆம் நாள் அறிவித்ததைக்கூட . அவர் சென்னையிலிருந்தவாறு வானொலி வாயிலாகத்தானே செய்தியாகக் கேள்விப்பட் டார். எனவே அவருக்கு மார்ச் திங்களில் நாடாளுமன்