பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 கலைஞர் 1 ஜனதா கட்சி, புதிதாகத் தோன்றியுள்ள ஒரு கட்சி. அதனுடைய மொழிக் கொள்கை இன்னமும் வெளியிடப் படவில்லை. இந்தியைக் கட்டாயமாகத் திணிக்க வேண் டும். என்ற மொழிக்கொள்கையை கொண்டிருப்பதாகவும் தெரியவில்லை. கட்சி அந்தக் ஒரு கட்சியில் உள்ள தனி மனிதர்களை வைத்துக்கொண்டு அந்தக் கட்சியின் கொள்கைகளை எடைபோட்டுவிடக்கூடாது. அந்தக் கட்சி எடுக்கும் கொள்கை முடிவுகளுக்குத்தான் அந்தத் தனி மனிதர்கள் கட்டுப்படவேண்டும். அல்லது அந்தக் கட்சியை அந்தத் தனி மனிதர்கள் உதறிவி வேண்டும். மொரார்ஜி எங்கேயிருக்கிறார் தெரியுமா? என்று சுப்பிரமணியம் கேட்பாரேயானால், நாம் ரைப் பார்த்துக் கேட்க முடியும் 1965-ல் தமிழ் நாட்டில் இந்தியை எதிர்த்த மாணவர்களையும், தமிழ் மக்களையும் நூற்றுக்கணக்கில் கொன்று குவிக்கக் காரண பெரியவர் இருந்த பக்தவத்சலம் இப்போது மாக - எங்கே இருக்கிறார்? எந்தக் கட்சியில் இருக்கிறார்? ய அவ எனவே, தனி மனிதர்கள் அல்ல பிரச்சினை! தி. மு. கழகத்தோடு 1971-ல் புதிய காங்கிரஸ் தேர்தல் உடன் பாடு கொண்டது. அப்போது கழகத் தேர்தல் அறிக் கையில் "மாநில சுயாட்சி” வலியுறுத்தப்பட்டுத்தான் இருந்தது. நம்மோடு புதிய காங்கிரஸ் உடன்பாடு கொண்டது என்பதற்காக, அது நமது மாநில சுயாட் சிக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது என்று கூறமுடி யுமா? அதைப்போலத்தான் மு. க. வுக்கும் ஜன தா கட்சிக்கும் தேர்தல் உடன்பாடு ஏற்பட்டாலும் (இது வரை ஏற்படவில்லை) அது ஜனநாயகத்தைக் காக்கும் பொதுப் பிரச்சினையில் ஏற்படுகிற உடன்பாடாக இருக்குமே மே தவிர, கழகத்தின் மொழிக் கொள்கையோ, தனித் தன்மைகளோ விட்டுக்கொடுக்கப்படுகிற நிலை யிலே இருக்காது என்பதைத் திண்ணமாகக் கூறமுடியும்.